ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||
Sadasiva Samarambam Sankaracharya
Madhyamam |
Asmatacharya Paryantham Vande
Guru Paramparam ||
இந்த ‘ரிஷிவித்யா’ என்ற குரு-சிஷ்யர்கள் அடங்கிய எங்களுடைய ப்ரஹ்மவித்யா குழுவின் குரு ஸம்ப்ரதாயத்தைக் குறித்து முதலில் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாயத்தின் ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியும், ஸ்ரீ நாராயணருமாக இருந்த போதிலும், வழிவழியாக அவர்களிடமிருந்து ப்ரஹ்ம வித்யாவானது குரு-சிஷ்ய பரம்பரையின் மூலமாக நமக்கு இன்று கிடைத்துள்ளது.
பாஷ்யகாரர் என்று சொல்லப்படுகின்ற ஸாக்ஷாத் சங்கரரின் அவதாரமாகிய ஸ்ரீசங்கர பகவத்பாதர் ப்ரஸ்தானத்ரயம் என்று சொல்லக்கூடிய பத்து உபநிஷதங்கள், ஸ்ரீமத்பகவத்கீதை மற்றும் ப்ரஹ்மஸூத்ரத்திற்கு பாஷ்யத்தை அருளி, வைதிகத்திற்கு எதிரான கருத்துக்களை உடைய துர்மதங்களை பராஜெயம் செய்து, அத்வைத ஸித்தாந்தத்தை நன்றாக ஸ்தாபனம் செய்து கொடுத்துள்ளார். ஸனாதன தர்மிகளாகிய நாம் அவருக்கு என்ன கைமாறு செய்தாலும் அதற்கு ஈடாகாது. அவருடைய பாஷ்யங்களை படித்தும், படித்துக் கொடுத்தும், அத்வைதஞான ஸம்ப்ரதாயத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே, அவருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய ஆராதனையாகும். நூல் மட்டும் இருந்து அதனுடைய அர்த்தம் தெரியாமல் போனால், அது இறந்து போனதற்கு ஸமமாகும். ஆகவே, ஸ்ரீசங்கரரின் ஸம்ப்ரதாயத்தில் வந்த நாங்கள் நித்ய பாஷ்ய படனத்தை செய்து வருவதோடு, பாஷ்யகாரரின் பாஷ்யங்களை நல்ல முறையில் பரம்பரையில் சொல்லப்பட்ட அர்த்தங்களுக்கு முரண்படாமல் புஸ்தகமாகவும் பதிப்பித்து வருகின்றோம். படிப்பதையும்-படித்துக் கொடுப்பதையும், அதில் நிற்பதையும் விடாமல் செய்வதே மிகப்பெரிய தவமாகும் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆகவே, இதுவே எங்களுடைய லக்ஷியமாகும். அதுமட்டுமல்லாமல் நாங்கள் செய்வதை மற்ற முமுக்ஷுக்களுக்கும் சென்று சேர்த்து, அவர்களும் அதில் நிற்க செய்வது நோக்கமாகும். இதில் ஈடுபாடுடைய மற்றவர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.
( Vedanta Acharya - Tiruvannamalai )
ஸ்வாமிகள் திருச்சியில் 1974-ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே ஆன்மிக ஸாதனைகளில் பெரும் நாட்டம் கொண்டிருந்தவர், தகுந்த வழிக்காட்டி கிடைக்காததால், தன்னுடைய குருவை தேடி இமயமலையின் அடிவாரமாகிய ரிஷிகேஷத்தை அடைந்தார். இறையருளால் அங்கு தன்னுடைய ஆச்சார்யராகிய பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி சாந்திதர்மானந்த ஸரஸ்வதீ அவர்களிடம் சென்றடைந்தார். அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு, யோகத்தையும் பயின்றார். பிறகு, சிலகாலம் கழித்து, ஸ்வாமிகளின் வழிக்காட்டுதலின்படி சாஸ்த்ர அத்யயனத்தில் ஈடுபட்டார். முறையாக ஸ்வாமியிடம் இருந்து ப்ரஸ்தானத்ரய பாஷ்யத்தையும், மற்றும் ஸ்ரீமத் பாகவதம், யோக தர்சனம் முதலான முக்கியமான க்ரந்தங்களையும் கற்றறிந்தார். ஸ்வாமி அவர்களின் ஆரம்ப காலத்திலேயே ஆச்சார்யரின் வித்யா குருவாகிய பரம பூஜ்ய ஸ்ரீஸ்வாமி இராமானந்த ஸரஸ்வதிஜீ அவர்பால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய குருவாக வரித்திருந்தார். ஆனால், ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸந்நியாஸம் செய்து கொள்வதற்கு சிலகாலம் பொருத்திருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். ப்ரஸ்தானத்ரய ச்ரவணம் முடிந்தவுடன் ஸ்வாமிகள் க்ஷேத்ராடனத்தை தபஸாக செய்ய தொடங்கினார். தென்னிந்தியாவில் பல க்ஷேத்ரங்களை பாதயாத்திரையாக சென்றவர், மத்திய ப்ரதேசத்தை அடைந்து நர்மதை நதியை முழுவதுமாக வலம் வரக்கூடிய நர்மதை பரிக்ரமத்தை செய்து கொண்டிருக்கையில், வழியில் தன்னுடைய குருவாக வரித்திருந்த பூஜ்ய ஸ்ரீ இராமானந்த ஸ்வாமிகளை தர்சித்தார். ஸ்வாமிகள் அவரிடம் ஸந்நியாஸத்தை ப்ராத்திக்க, குருதேவரும் ஸம்மதம் தெரிவித்தார். ஸ்வாமிகள் நர்மதை பரிக்ரமத்தை முடித்து 2007ஆம் ஆண்டு மஹாசிவராத்ரி அன்று குருதேவரின் ஸந்நிதியில் ஸந்நியாஸ தீக்ஷையை பெற்று, ஸ்வாமி பரமஹம்ஸானந்த ஸரஸ்வதி என்ற யோகப்பட்டதையும், ப்ரணவ தீக்ஷையையும் அடைந்தார். பிறகு பரம்பரையாக அடைந்த ப்ரஹ்மவித்யாவை தகுந்த முமுக்ஷுக்கள் வந்து கேட்டால், உபதேசிப்பாயாக என்ற குருதேவரின் ஆக்ஞையின்படி, திருவண்ணாமலையில் தங்கி 2008ஆம் ஆண்டில் ஆரம்பித்து, 2017ஆம் ஆண்டுவரை முழுமையான ப்ரஸ்தான த்ரயத்தையும் சாங்கர பாஷ்யத்துடன் இருமுறைகள் சிஷ்யர்களுக்கு உபதேசித்து, தற்போது மனனத்தின் பொருட்டும், ஸாதனையின் பொருட்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு திருவண்ணாமலையில் வசித்து வருகின்றார். தான் படித்த நூல்கள் தமிழில் வரவேண்டும் என்று கருதி அவற்றை நூலாக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
Namaskaram : - The Upanishads, Prakarana Granths and Satsangs classes taken by Swamiji are given here and we are kindly requested to use them for spiritual progress. Namaskaram.
UPANISHADS
(watch on videos touch to the each topic )
PRAKARANA GRANTHAS
(watch on videos touch to the each topic )
READ MORE . . .
Shankara Bhashya in Tamil
Acharya - Swami Paramahamsananda Saraswati Maharaj.
Srimad Bhagavad Gita - Shankara Bhashya in Tamil Classes - youtube link :
youtube.com/playlist?list=PLGWmPRQOz1DtUW8glkIVKDnxXVOIzYy96&si=LORaIGSx5Vm-zUwt
MANDUKYA UPANISHAD - PART 1, SANKARA BHASHYA - TAMIL.
RS. 850/-
Read more . . .
PRASHNA UPANISHAD, SANKARA BHASHYA - TAMIL.
RS. 700/-
Read more . . .
MUNDAKA UPANISHAD, SANKARA BHASHYA - TAMIL.
RS. 850/-
Read more . . .
" यस्य देवे परा भक्ति: यथा देवे तथा गुरौ ।
तस्यैते कथिता ह्यर्था: प्रकाशन्ते महात्मन: ॥ "
( श्वेताश्वतरोपनिषत् : 6 - 23 )
" யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ ।
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மன: ॥ "
( ச்வேதாச்வதரோபநிஷத் : 6 - 23 )
' எவருக்கு இறைவனிடம் மேலான பக்தியுள்ளதோ, அதே போல குருவிடமும் பக்தியுள்ளதோ, அந்த மஹாத்மாக்களுக்கே உபநிஷதங்களில் உபதேசிக்கப்பட்ட அர்த்தங்களானது உள்ளது உள்ளபடி நன்கு ஸ்புரிக்கின்றது. '